அன்பும் கருணையும்
அன்பும் கருணையும் என்ற மாயக் கயிறு தான் தெய்வ நிலையையும், எல்லா பொருட்களையும், உயிர்களையும், மனிதர்களையும் வழி நடத்திக் கொண்டு இருக்கின்றது. இதனை உணர்ந்து நடந்து கொள்வதற்கு வாய்ப்பாக மனிதனுக்கு ஆறாவது அறிவு அமைந்து இருக்கின்றது. இந்தப் பெருநிதியை மனிதன் அறிந்து கொள்ளாமலோ, அலட்சியப்படுத்தியோ, உணர்ச்சிவயப்பட்டோ வாழ முற்பட்டால், கயிறு அறுந்த காற்றாடியைப் போல், மனிதன் நெறி பிறழ்ந்த வாழ்வு வாழ வேண்டி இருக்கும்.
எனவே அன்பும் கருணையும் மனித வாழ்வுக்கு இன்ப ஊற்று என உணர்ந்து விழிப்புடன் வாழ்ந்தால், இன்முகமும் இனிய சொல்லும் உதவும் கரங்களும் வெற்றி வாழ்வும் உருவாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகற்ப பயிற்சி, Dec 03, 2011 Sat, மாலை 6.00 மணி முதல்
VMSKY அறிவுத்திருக்கோவில், சிங்கப்பூர்
No comments:
Post a Comment