பிரம்ம ஞானம்
பால் தயிராக மாற்றம் பெறுகிறது. தயிரை அது அப்போதுள்ள நிலையைக் கொண்டு தயிர் என்றும் கூறலாம். அதற்கு முன்னிலையைச் சிந்தித்து உணர்ந்த தெளிவில் அதே தயிரைப் பால் என்றும் கூறலாம். அதே போல எந்தப் பொருளையும் பார்க்கும் போது, சிந்தனை மூலம் அதன் தன்மாற்றச் சரித்திரத்தை நோக்கி இறுதியாக வரும் மூல நிலையை உணரும்போது அனைத்து தோற்றங்களையும் இறைநிலையாகவே உணர முடியும். இவ்வாறு உணர்ந்து கொள்ளும் விரிந்த நுண்ணிய பேரறிவே பிரம்மஞானம் ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment