வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 2 December 2011

யோகமும் யாகமும்

யோகமும் யாகமும்

மனத்தினாலேயே தான் மனிதன் திண்மை பெற்று, அதனை ஒழுங்குபடுத்தி அதன் மூலமாகச் செய்யும் செயலையும் ஒழுங்குபடுத்தி உயர முடியும் என்று நிச்சயமாகக் கண்டார்கள். மனம் என்பது இன்னது தான் என்று உணர்ந்தவர்கள் மனத்தை உள்ளடக்கி அதற்குப் பயிற்சி செய்தார்கள்.

அவ்வாறு இயலாதவர்களுக்கு அதே மனத்தைச் சடங்குகள் மூலமாக ஒன்றுபடக்கூடிய முறையை 'யாகம்' என்று சொன்னார்கள். அதே மனத்தை உள்ளடக்கி உயிரிலேயே ஒடுக்கி அதன் மூலமாக மனத்தினுடைய உண்மைகளை உணரக் கூடியதை 'யோகம்' என்றும் சொன்னார்கள்.

வெளிப்படையாகச் செய்தால் 'யாகம்' என்றும் உட்புறமாகச் செய்தால் 'யோகம்' என்றார்கள். யோகம் என்றால் ஒடுக்கம், யாகம் என்றால் படர்க்கை என்றும் சொல்லலாம்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

அகத்தாய்வு முதல் நிலைப்பயிற்சி - Dec 11, 2011 காலை 9.00 மணி முதல் 5.30 மணி வரை

No comments:

Post a Comment