வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 13 December 2011

சித்து வித்தைகள்

சித்து வித்தைகள்

ஒரு பொருளை இன்னொரு பொருளின் உதவியில்லாமல் யாரும் உண்டு பண்ணி விட முடியாது. ஒரு நெல் மணியை மண்ணிலே போட்டு, முளைவந்து, பிறகு பயிராகிக் கதிர் வந்து, ஒரு தானியத்தை அந்தத் தானியம் தான் கொடுக்க முடியுமே தவிர, மனிதனால் முடியாது. மடக்கி வைக்கப்பட்ட மாஞ்செடி எழுகிறது. 'அங்கே' இருக்கிற பொருள் 'இங்கே' வருகிறது. அவ்வளவே! மனக்காந்தப் பயிற்சி, வாக்குச் சாதுரியம், கையாட்கள் ஒத்துழைப்பு இவற்றால் வித்தை செய்து, பார்ப்பவர் வியப்புறக் காட்டிப் பணமும், பெண்டிர் நேசமும் பெறுகின்றனர்.

இந்த வித்தைகளைப் பார்க்கிறவர்கள் இவை எப்படி நடக்கின்றன எனத் தெரிந்து கொள்ளும் வரையிலே தான் விந்தையாக இருக்கும். தவிர, அவற்றைச் செய்கிறவர்கள் பணத்தையோ, விளம்பரத்தையோ பெறுவதைத் தான் உள்நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

அறிவுப்பூர்வமான, விஞ்ஞான ரீதியான யோகம் பயில்கின்ற நாம் இதிலெல்லாம் மயக்கமுறுகின்ற நிலையிலே இல்லை.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment