ஆசை சீரமைத்தல்
மனம் வெகு வேகமாக இயங்கக் கூடியது. ஒரு நொடியில் பல நூறு ஆசைகளை மனத்தால் உருவாக்கிக் கொள்ள முடியும். மேலும் அந்த ஆசைகளுக்குச் சமுதாய ஒப்புதலும், இயற்கை விதியின் ஆதரவும் வேண்டும். மனம் மாத்திரம் ஆசைப்பட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? நிறைவேற்ற முடியாத ஆசைகளை எல்லாம் அதிகமாக மனம் உருவாக்கிக் கொண்டே இருப்பதனால் நாளுக்கு நாள் மனம் தளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது. வாழ்க்கையிலே வெற்றி கிட்டுவதில்லை. விரக்தி, வெறுப்பு முதலியவை உண்டாகின்றன.
ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால், எம்மாதிரியான ஆசைகளை நிறைவேற்ற இயலும் என எண்ணிப் பார்த்து ஆசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான முறையான பயிற்சியே ஆசை சீரமைத்தல் என்பதாகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment