தவப்பலன்கள்
தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாகக் குறைந்துவிடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும், நமது உயிராற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது. ஆற்றல் சேமிக்கப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, தண்ணீரை ஒரு தொட்டியில் வைத்து கீழே நெருப்பு மூட்டிக் காய்ச்சினால், நீராவியாகி மேலே வெளியேறும். நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால், தொட்டியில் கால் பகுதிதான் நீர் இருக்கும். அதற்குப் பதிலாக, தொட்டிக்கு மேலே ஒரு மூடிபோட்டு, அந்த நீராவியைக் குழாய் மூலமாக மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்று, குளிரச் செய்து, நீராக மாற்றி, மீண்டும் குழாய் மூல்மாக, இத்தண்ணீரைக் கொண்டுவந்து தொட்டியில் வந்து விடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது நான்கு மணி நேரம் நீர் கொதித்துக் கொண்டிருந்தாலும், முன்னே தண்ணீர் செலவாகிக் கொண்டிருந்த அளவு தண்ணீர் செலவாகாது. சிறிது செலவானாலும், மிச்சமெல்லாம் சேமிக்கப்
படும்.
அதே போன்று ஐம்புலன்கள் மூலமும் சிந்தனையின் மூலமும் ஓடிக் கொண்டிருக்கின்ற நமது மனத்தை, சீவகாந்தத்தை, உள்ளே இருக்கின்ற உயிரின் மீது செலுத்தி தவம் செய்யும் பொழுது மீண்டும் ஆற்றல் சேமிக்கப்படுகிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment