மதங்களின் நோக்கம்
மதத்தை ஒரு பறவையாக பாவித்துக் கொண்டோமானால் அதற்கு இரண்டு இறக்கைகள்: ஒரு இறக்கை இறைவழிபாடு, இன்னொரு இறக்கை உயிர்வழிபாடு.
இறைவழிபாடு தான் அறிவின் வழிபாடு. அறிவை உயர்த்திக்கொண்டு முழுமை பெற்று, அவனோடு தானும் ஒன்றாகி நிற்பதற்குரியது இறைவழிபாடு. இதன் மூன்றும் அம்சங்கள் பக்தி, தன்னிலை விளக்கம், முழுமைப்பேறு என்பன.
உயிர்வழிபாட்டைத் தான் அறநெறி என்கிறோம். அதன் மூன்று அம்சங்கள் ஒழுக்கம், கடமை, ஈகை என்பன.
உலகில் தோன்றிய எல்லா மதங்களின் அடிப்படைக் கருத்துக்களும் இறைவழிபாடு மற்றும் உயிர்வழிபாடு என்பதே.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment