வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 30 December 2011

பேரியக்க மண்டலம்

பேரியக்க மண்டலம்

மரம் என்ற ஒரு தோற்றத்தைப் பகுத்துணர்வால் அடித்தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் என்ற பல பெயரால் அழைக்கிறோம். இவையெல்லாம் மரம் என்ற ஒரே தோற்றத்தின் உறுப்புகளேயாகும். அவையனைத்தையும் சேர்த்து முழுமையாக ஒரு சொல்லில் கூறும்போது மரம் என்று கூறுகிறோம்.

இதே போன்று அணுக்கள், பஞ்சபூதம், கோள்கள், சூரியன், உலகம், உயிர்கள் என்று கூறுவதெல்லாம் ஒரே ஒரு இறைநிலையின் தன்மாற்றத்தால் மலர்ந்துள்ள பேரியக்க மண்டலத்தின் கூறுகளேயாகும்.

இந்தப் பெரு மண்டலத்தின் தோற்றங்களையும் ஆற்றல்களையும் புலன்களால் தனித்தனியே எல்லை கட்டியும், அவற்றுக்குத் தனித்தனியே பெயர் வைத்தும் அழைப்பது மனிதனிடம் அமைந்துள்ள ஆறாவது அறிவின் சிறப்பு ஆகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

உலக சமாதான வேள்வி On டிசம்பர் 31, 2011 மாலை 6.00 மணி முதல் VMSKY, சிங்கப்பூர் 357788

No comments:

Post a Comment