கடமை உணர்வு
நாம் பிறந்தோம். 15 ஆண்டுகள் வரையில் எப்படி வாழ்ந்தோம். சமுதாயத்திலிருந்து ஒரு பெருமளவு பொருளாதாரத்தைப் பெற்றுக் கொண்டு தான் வளர்ந்து வந்துள்ளோம். அவ்வாறு பெற்றுக் கொண்டதால் கடன்பட்டவர்கள் தானே நாம். இத்தனையும் அனுபவித்து அனுபோகித்த பிறகு ஏதேனும் திருப்பித் தந்தோமா? பிறந்த போது ஏதேனும் கொண்டு வந்தோமா கொடுப்பதற்கு? இல்லையே. ஆகவே சமுதாயம் தந்தது தான் எல்லாம். இந்த உடலும் உட்பட.
எனவே சமுதாயத்திற்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். இந்தக் கடனைத் தீர்ப்பது எப்படி?
உடல் வளர்ச்சி பெற்ற பின்னர், அறிவு வளர்ச்சி பெற்றபின் அதே அறிவைக் கொண்டு, வலுவைக் கொண்டு இந்த சமுதாய்த்திற்கு எந்தெந்த அளவிலே நன்மை செய்ய முடியமோ அதை உணர்ந்து நலம் தரத்தக்க வழியிலே செயல் படுத்த வேண்டுமென்று கடனைத் திருப்பித் தர வேண்டும் என்ற நீதி உணர்வு, அந்த நீதி உணர்வை ஒட்டிய செயல், அந்தச் செயலிலே வரக் கூடிய நல்விளைவு, சிந்தனை, அனுபவங்கள், இதைத்தான் 'கடமை உணர்வு' என்கிறோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment