கோள்களும் நமது உடலும்
சூரியனிலிருந்து வருகின்ற அலை எலும்புகளோடும், புதன் தோல் மீதும், வெள்ளி சீவ வித்து சக்தியோடும், சந்திரன் ரத்த ஓட்டத்தோடும், செவ்வாய் எலும்பிலுள்ள மஜ்ஜையோடும், சனி மூளை செல்களோடும், சனி நரம்புகளோடும், இராகு-கேது மனத்தோடும் தொடர்பு கொள்கின்றன என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இராகு, கேது காந்த அலை வீச்சால் சூரிய ஒளி, சந்திர ஒளி பாதிக்கப்படும் பொழுது நம் உடலில் உள்ள இரசாயனமும் வேறுபடும். அந்த மாறுதல் ஏற்படும் போது நமது உணவு செரிமானம் குறைவாக இருக்கிறது. அந்த நேரத்தில் தெய்விக நினைப்பு அல்லது வேறு ஏதாவது சங்கற்பம் செய்வதே நல்லது. அப்படி இல்லாமல் விருப்பம் போல் நடக்கின்ற போது உடலுறவு கொள்ள நேரிடும். அந்த நேரத்தில் உருவாகும் குழந்தை கேடுற்ற உடலுல், மனமும் உடையனவாக இருக்கக் கூடும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம். ஆகவே இத்தகு விபத்துக்களைத் தடுப்பதற்காகவே அந்த நாட்களையும் நேரத்தையும் விரத நாட்களாக முன்னோர்கள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.
கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் உடலினுடைய சக்தி அழிவு இல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தி (immunity) அப்படியே காப்பற்றப்படும். கிரகணம் முடிந்து குளிப்பது என்பது எப்பொழுதும் குளிப்பது போல தான். அப்பொழுது குளிக்காமல் போனால் ஒன்றும் கெடுதல் இல்லை. தூய்மை வேண்டும் என்று நினைக்கும்போது எதற்குமே குளித்து விட்டுச் செய்வது ஒரு சடங்கு தான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment