சொர்க்கம் நரகம்
பருஉருவம் உடல், நுண்ணுருவம் உயிர், பிரணவ உருவம் சீவகாந்த அலை இம்மூன்றும் அடங்கிய திருவுருவமே மனிதன்.
உடல் வரையிலே எல்லை கட்டி மனித மனம் இயங்கும் போது அதனை நர அகம் என்பார்கள். இங்கு உணர்ச்சிகளே பெருகும். துன்பங்களும் சிக்கல்களுமே வாழ்வில் மிகையாக இருக்கும்.
உயிர் விளக்கம் பெற்றால் உயிரைப் பற்றியும் சீவகாந்தம் பற்றியும் விளக்கம்
உண்டாகும். இதனால் தீய வினைப் பதிவுகளைப் பதிவுகளை திருத்தி இன்பமும் அமைதியும் காணலாம். ஆகையால் உயிர் உணர்ந்த அறிவு நிலையை சுவர் அகம் (சொர்க்கம்) என்பார்கள். இந்த அறிவுநிலையில் தான் ஆன்மாவுக்கு பழிச்செயல்பதிவுச் சுமையிலிருந்து விடுதலை கிட்டும். இத்தகைய உயர்நிலை அறிவு, அகத்தவத்தால் தான் கிட்டும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment