மனம்
நாம் ஆற்றைப் பார்க்கிறோம். ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து ஓர் ஆறு நிரந்தரமாக இருக்கிற மாதிரி தெரிகிறது. ஒரு நிமிடத்துக்கு முன்னால் ஆற்றிலே நாம் பார்த்த தண்ணீர் இப்போது அந்த இடத்திலே இல்லை. அது போய்விட்டது. புதிதாகத் தான் இப்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், நாம் தொடர்ந்து ஓர் ஆறு இருப்பதாக வைத்துக் கொள்கிறோம். அது போன்றே மனம் என்பது ஓர் இயக்கம். உயிரினுடைய ஆற்றல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிற போது அந்த அலை வந்து கொண்டே இருக்கிறது. அதை எந்தெந்த இடத்தில் பாய்ச்சுகிறாமோ, அந்தப் பாய்ச்சலுக்குத் தக்கவாறு இங்கே பதிவைக் கொடுத்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கிறது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
அகத்தாய்வு முதல் நிலைப் பயிற்சி On Nov 21, 2012 At VMSKY, sg 357788
No comments:
Post a Comment