வேதம்
உலக இயலிலே இருக்கின்ற சாதரண மக்களுக்கு ஏதோ அறிய வேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்திற்கு விளக்கம் கொடுப்பதற்காக மெய்ப்பொருள் உணர்ந்த நிலையிலே உள்ளவர்கள் தன் கருத்தை தந்த போது அதுவே வேதம் என அழைக்கப் பெற்றது.
மெய்ப்பொருள் ஒன்றை உணர்ந்தவர்களால் தான் விளக்க முடியும். இந்தப் பிண்னணியிலே 'வேதம்' என்பதானது இறைவனாலேயே சொல்லப்பட்டது என்பதிலே தவறேதுமில்லை. விளக்கம் பெற்ற மனிதன் இறைவன் நிலையிலே இருந்து சொல்வது என்பதைத்தான் தெய்வமே பேசுகிறது என்று சொன்னார்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment