வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 26 January 2012

பஞ்சதன்மாத்திரை

பஞ்சதன்மாத்திரை

உடலில் உயிர் இயங்குகின்ற போது சூழ்நிலை காரணமாக இயக்க மாறுபாடு அடைகிறது. (life energy aggravates according to its response to the atmospheric disturbance) சூழ்நிலைப் பொருளோடு புலன்கள் மூலம் தொடர்பு கொள்கின்ற போது உயிருக்குப் படர்க்கை நிலை தோன்றுகிறது.

உடல் அமைப்பில் ஆறு சுவையும் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சுவை அதிகமாக இருக்கலாம். தேள் கொட்டினால் அதன் விஷமாகிய இரசாயனம் பரவி உப்புச் சுவை அதிகரிக்கும். பாம்புக் கடியினால் காரச்சுவை அதிகரிக்கும். ஜாங்கிரி தின்றால் இனிக்கிறது.

ஜாங்கிரி இனிக்கவில்லை - தன்மாற்றம் பெற்ற உயிர் தான் இனிக்கிறது என்பது போல், இன்ப துன்பம் அனுபோகப் பொருளில் இல்லை. உயிராற்றல் தூண்டப் பெற்று புலன் இயக்கத்தால் நடைபெறுகின்ற தன்மாற்றம் தான் உணர்ச்சியாக, இன்ப துன்பமாக உணரப் பெறுகிறது. இதுவே பஞ்சதன்மாத்திரை எனப்படும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment