ஐயுணர்வும் மெய்யுணர்வும்
புலன்கள் எந்தப் பொருளை உணர்ந்தாலும் அனுபவித்தாலும், நம்முடைய உயிர்ச்சக்தி அந்த இடத்திலே செலவாகிறது. மேலும் மேலும் செலவாகின்ற போது உடலில் உள்ள அணு அடுக்குகள் சீர்குலைந்து வலி, நோய், துன்பம் ஏற்படுகின்றன. ஆகையினால் புலன் உணர்ச்சிக்குட்பட்டு எத்தகைய இன்பம் அனுபவித்தாலும் அதிலுள்ள அளவு, முறை என்ற இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். முன்அனுபவம், பின்விளைவு, தற்போது உள்ள சூழ்நிலை இந்த மூன்றையும் இணைத்து அறிவைக் கொண்டு விரித்துப் பார்க்க வேண்டும், அதில் விழிப்பு நிலை வந்து விட வேண்டும். சுவையாக இருக்கிறது என்று எண்ணிச் சுவையிலே மயங்கி நிற்பது 'ஐயுணர்வு'. இதற்கு மேலாகப் போனால் உயிருக்குத் துன்பம் என்று அளவோடு நிறுத்திக் கொள்வது 'மெய்யுணர்வு' ஆகும்.
இந்த ஐயுணர்வினால் மனிதன் உணர்ச்சி வயப்படுகிறான். மெய்யுணர்வினால் மயக்கம் தெளிந்து ஞானம் பெறுகிறான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
மனவளக்கலை யோகா அறிமுக நிகழ்ச்சி - இன்று ஜனவரி 28, 2011 மாலை 6.30 மணி முதல் -
by முனைவர் K பெருமாள் - VMSKY சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment