பகுத்துணர்வில் தொகுத்துணர்வு
பகுத்துணர்வு என்பது புலன் அறிவே. அது இது என்று பிரித்துக் கொண்டே போய் அதன் தன்மையை உணர்ந்து கொள்வது பகுத்துணர்வு. ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலாக முழுமுதற் பொருளாய் இருப்பது எது? இதை எல்லாம் அனுபவிக்கக் கூடிய அறிவு எது? என்பதெல்லாம் அறிந்து, அந்த அறிவைப் பயனுள்ள முறையிலே அறிந்து கொள்ளும் போது தான் தொகுத்துணர்வு உண்டாகிறது.
ஐயுணர்வு பெற்ற போதிலும் அவன் மெய்யறிவு பெறாது போனால் அந்த ஐயுணர்வும் பயனற்றதாகப் போய்விடும். இந்தப் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பெற வேண்டுமானால் அகத்தவம் பயில வேண்டும். அதைப் பயிலப் பயிலத் தானாகவே மெய்யுணர்வு பெறுவீர்கள். எடுத்து முடிக்கக்கூடிய காரியங்கள் எதுவானாலும் இப்பிறவியில் இயலவில்லை என்றாலும் பிறக்கக் கூடிய குழந்தைகளாவது செய்து விடும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
காயகல்பம் பயிற்சி by முனைவர் K பெருமாள் On ஜனவரி 29, 2011 மாலை 6.00 மணி
At VMSKY சிங்கப்பூர் 357788
No comments:
Post a Comment