வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 30 January 2012

உறவும் துறவும்

உறவும் துறவும்

ஓர் அன்பர் உணவு அருந்த என்னை அவரது இல்லத்திற்கு அழைத்திருந்தார். இலையில் நிறைய பதார்த்தங்கள் வைத்திருந்தனர். கொஞ்சம் தயங்கினேன். "என்ன ஐயா, எண்ணிப் பார்க்கிறீர்கள்" என்று கேட்டார்கள். "எதிலுமே நான் எண்ணித்தான் செயல்படுவது வழக்கம்" என்று சொன்னேன். "இந்தப் பதார்த்தம் சிறப்பாக, நன்றாக இருக்கும்" என்று வற்புறுத்தினார்கள். நானும் "நன்றாக இருக்க வேண்டுமே" என்று சொன்ன போது அவர்களுக்கு வருத்தமாகப் போய்விட்டது.

பிறகு அவர்களே "ஆம் அய்யா, நீங்கள் நன்றாக இருந்தால் தானே நாங்களும் நன்றாக இருக்க முடியும்" என்று சொன்னார்கள். நான் பிறகு சொன்னேன். "நீங்கள் விருப்பப் பட்டதை மாத்திரம் வைத்தீர்களானால் நான் எனக்கு விருப்பப்பட்டதை மாத்திரம் எடுத்துக் கொண்டு மற்றதைத் தள்ளி விடுவேன். எனக்கு ஒத்து வருகின்ற உணவைச் சாப்பிட வேண்டுமானால் நான் சொல்வதை மட்டும் வைத்து விட்டு வேண்டாததை விலக்கி விடலாம்" என்று சொல்லி பிறகு சாப்பிட்டு வந்தேன்.

இவ்வாறாக உண்மை உணர்வு வந்துவிட்டால் ஒவ்வொன்றிலேயும் அந்த உறவும், துறவும் கூடவே வந்து விட வேண்டும். ஒவ்வொரு செயலிலேயும் தெளிவோடும் விழிப்போடும் அளவு கட்டும்போது தொடர்பு தனியாக குறிப்பிட வேண்டும் என்பதல்ல.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment