வாழ்க்கை விளக்கம்
ஒரு சிறு பகுதி இயக்கத்திலிருந்து முழுமையான விளக்கத்தை அறிவு வரையில் மனிதன் அறிந்து கொண்டே வருவது தான் விளக்கம். விளக்கத்தை உணர்ந்து கொண்டு செய்யும் போது மிக மிகத் தெளிவோடு வெற்றியோடு நிறைவாகச் செய்ய முடியும்.
ஒரு படியில் இறங்குகிறோம். இறங்கும்போது படிகள் உள்ளன என்று தெரிந்து கொண்டோம். அந்தப் படிகளைப் பார்த்துக் கொண்டு இறங்கும் பொழுது வசதியாக வெற்றியோடு இயங்கி விடுகிறோம். படிகள் இருப்பதே தெரியாமல் காலை வைத்தால் விழுந்து விட ஏதுவாகும்.
அதே போன்று வாழ்க்கை என்பது என்ன என்பதை உணர்ந்து கொண்டால், வாழ்க்கை செம்மை பெறும்; வெற்றி பெறும்; மகிழ்ச்சியாக இருக்கும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment