எண்ணம்
வாழ்க்கைக்கே விளைநிலம் மனம் தான். மனத்திலே தான் எண்ணம், சொல், செயல் என்ற முத்தொழிலும் பிறக்கின்றன. சொல், செயல் கூட எண்ணமாயிருந்து தான் சொல்லும் செயலும் ஆகின்றன. 'மனம்' என்றாலும் 'எண்ணம்' என்றாலும் ஒன்று தான். அதனால் எண்ணத்தின் தன்மையையும், ஆற்றலையும், விளைவையும், வகைகளையும் அறிந்திருக்க வேண்டும்.
மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அது தான் அதன் இயல்பு, தன்மை. அதாவது எண்ணங்கள் பிறந்து கொண்டு தான் இருக்கும். இந்த விதியை உணர்ந்து விழிப்புடன் இருந்தால் உயர்வு. அறியாமல் மனத்தின் போக்கிற்கு எண்ணத்தை விட்டு விட்டால் தாழ்வு.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment