இயற்கை
பிரபஞ்சம் முழுவதும் பரமாணுக்களின் இயக்கக்கூட்டு. எனவே, அடிப்படையாக உள்ள ஆதி நிலை (stock force) ஒன்று. அணுவிலே இருந்து, அணுக்கள் கூட்டாக இயங்கும் பிரபஞ்சம் ஒன்று. பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோன்றி, ஒன்று முதல் ஆறு அறிவு வரையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவன்களில் அறிவு என்று ஒன்று உண்டு. ஆதி, பிரபஞ்சம், அறிவு (Being, Becoming & knowing) இந்த மூன்று நிலைகளையும் சேர்த்து ஒன்றுபடுத்தி ஒரே சொல்லாகக் கூறும் போது அதற்குப் பெயர் தான் இயற்கை.
இயற்கை என்ற சொல்லிலிருந்து, கருத்திலிருந்து எந்தப் பொருளையோ, எந்த இயக்கத்தையோ, எந்தக் காட்சியையோ பிரித்துப் பேச முடியாது. இது இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று எதையுமே கூற முடியாது.
இயற்கை முழுமையானது. மனிதன் பகுதியானவன். இந்தப் பகுதியிலிருந்து முழுமையை நோக்கி அறிவிலே உயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு செயல் தான் மனிதன் என்ற தோற்றம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment