ஒழுக்கம்
நான் ஒழுக்கத்தைப் பற்றி அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது, ஓர் அன்பர் 'தத்துவ ஞானிகள் எல்லோரும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்துகின்றார்கள். ஏன் அவரவர்கள் விருப்பம் போல் செயல் செய்யக் கூடாது?' என்று கேட்டார்.
'நீங்கள் எப்படி வந்தீர்கள்? வழியில் சாலையில் சிவப்பு விளக்கைப் பார்த்தீர்களா? பார்த்தவுடன் என்ன செய்தீர்கள்?' எனக் கேட்டேன். அதற்கு அவர், 'காரை நிறுத்தி விட்டேன்' என்றார். 'ஏன் நிறுத்தி விட்டீர்கள்? உங்கள் கார் தான் வேகமாகப் போகிறதல்லவா? நிறுத்தாமல் போகலாம் அல்லவா?' என்று கேட்டேன். 'ஐயோ! விபத்து ஏற்படுமே!' என்றார் அவர்.
இதைப் போலவே, சமுதாயம் போட்டுள்ள சட்டத்தின்படி வாழ்வதுதான் ஒழுக்கம். ஒவ்வொரு மனிதனோடும் சமுதாயம் ஒரு சங்கிலி போல் பிணைப்புற்றிருக்கிறது. யாரொருவருடைய செயலும் மற்றவர்களுக்குப் பாதகமாக அமையாமல், எல்லோருக்கும் நன்மையாக அமையும்படிப் பார்த்து, பிறரை மதித்து வாழ வேண்டும். இது தான் ஒழுக்கம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment