உலக வரலாறு
அமெரிக்காவில் ரக்கர்ட்ஸ் பல்கலைக் கழகத்தில் 'உலக சரித்திரம் உங்களுக்குத் தெரியுமா? படித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.
'உலக சரித்திரத்தை நான் படிக்கவில்லை. அதனுடைய கருத்து என்ன? என்பது மாத்திரம் எனக்குத் தெரியும். உலகம் தோன்றியது முதல் இன்று வரையில் அரசியல், பொருளாதாரம், மதம் என்ற மூன்று துறைகளைச் சார்ந்த தலைவர்கள் சமுதாயத்தைக் காத்து, திருத்தி, வழிகாட்டி வந்தார்கள். இவற்றில் நல்லவர்களும், தகுதியானவர்களும் இருந்தனர்.
என்றாலும், மூடநம்பிக்கை கொண்ட மதத்தலைவர்கள், பேராசை கொண்ட பொருள்துறைத் தலைவர்கள், கொடுமையே குணமாகக் கொண்டே அரசியல் தலைவர்கள் ஆகியோர் இழைத்த கேடுகளின் தொகுப்பு தான் உலக சரித்திரமாக இருக்கிறது. இந்த உலகம் எப்படித் தோன்றியது? எப்படி வளர்ந்தது என்பதைக் கூறும் உலக சரித்திரத்தை நான் பார்த்தது இல்லை' என்றேன்.
இந்தக் குறைபாடுகளை நீக்கும் வகையிலே அமைக்கப் பட்டதே மனவளக் கலையின் தனிச்சிறப்பு ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment