வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Sunday, 12 February 2012

பசி

பசி

பசி ஏற்படுகிறது. பசியால் துன்பம் இல்லை. பசிக்கு உணவு இல்லாது நீடிக்க வைத்து விட்டது தான் துன்பம். இல்லையானால் பசியே இன்பம் தான். பசி எடுத்ததனால், "நன்றாகச் சாப்பிட்டேனப்பா" என்று சொல்கிறோம். இதற்கு முன் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணித்த உடலுக்குப் பசி வருகிறது. பசிக்கு காலத்தோடு தேவையானபடி உணவு கொடுத்துப் பூர்த்தி செய்யாவிட்டால், சமன் செய்யாவிட்டால், நீடிக்கவிட்டால் அது தான் துன்பமாகிறது. எனவே மனிதனுடைய அடிப்படைத் தேவையை உணர்ந்து அதைப் பூர்த்தி செய்வதற்கு ஒழுங்கான முறையில் அனைவரும் உண்ண உறுதி செய்யப் பட வேண்டும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment