வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 13 February 2012

விரதம்

விரதம்

ஒரு பொழுது இருந்து கடவுளை நீ வேண்டு என்று சொன்னால் என்ன அர்த்தம். ஒரு நாள் பட்டினி கிடக்கும்போது பசியின் கொடுமையைத் தெரிந்து கொள்ள முடியும். இரண்டாவது வயிற்றில் உள்ள கொழுப்பு, பூச்சி இவைகளெல்லாம் அதிகமாகி வர வர அது உடம்பையே சாப்பிட்டு விடும். அதையும் சரி செய்து சீர்திருத்திக் கொள்ளவும், பிறருடைய மனநிலையும் கருத்தையும் உணர்ந்து கொள்ள விரதம் என்று வைத்தார்கள்.

ஆனால் தற்பொழுது, சாதாரண நிலையில் ஒரிரண்டு இட்லி சாப்பிடுபவர், விரத நாட்களில் இட்லி, தோசை, உப்புமா, பலகாரம் என்ற பத்து வகையில் போட்டு சாதாரண உணவுக்கும் மேலாக விரத நாட்களில் சாப்பிடுவதால், விரயமும் அதிகமாகிறது, விரத நோக்கமும் வீணாகிறது.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment