கடமையும் உரிமையும்
செல்வந்தர்கள், நல்ல கல்விமான்கள், எழுத்தாளர்களெல்லாம் கூடித்தான் உலகுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர, ஏழைகள் கூடிக் கூட்டம் போட்டு, இந்த உலகத்தை சமாதானம் பண்ண வேண்டும் என்று எடுத்தால், நிலைமை மாறாது.
உரிமை கோரும்போது நட்டம் தான் வரும். கடமையை நிறைவேற்றும்போது தான் லாபம் வரும். கடமையினால் தான் வாழ வைக்க முடியும். ஆகவே கடமையைச் செய்தால் எல்லா உரிமையும் தானாகவே வரும்.
அந்தத் தத்துவத்தை மனிதன் உணர்ந்து கொள்ளச் செய்ய வேண்டுமானால், உள்ளூர இருக்கிற தெய்வீக ஆற்றலை உயர்த்திவிட வேண்டியது தான் அவசியம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment