நிறைவு
பெரிய வெள்ளம் வருகிறது. ஒரு குட்டையில் நிரப்ப வேண்டும் என்று கொண்டு போனால் ஒரு நிமிடத்தில் நிரம்பி விடுகிறது. நிரம்பிய அந்த வெள்ளம் மறுபடியும் வேறு பக்கம் போகும். பிறகு ஒரு ஏரியில் விடுகிறீர்கள். ஏரி நிரம்பி விட்டால் அதன் பிறகும் போகிறது. பெரிய அணையில் விடுகிறீர்கள். அணை நிரம்பின பிறகு ஆறாகிப் போகிறது. சமுத்திரத்திற்குப் போன பிறகு தான் அதற்கு அமைதி வரும். எங்கே இருந்து புறப்பட்டதோ, அங்கே போனால் தான் அமைதி இருக்கும். பேராற்றலுள்ள அறிவு நிலைக்கும், எந்த இடத்திலிருந்து பிறவி தோன்றியதோ, அந்த இடத்தை அறிந்து கொண்டால் தான் திருப்தியாக இருக்கும். அங்கே தான் நிறைவு கிட்டிடும். இதற்கு மத்தியில் எந்தப் பொருளாலும் நிறைவு கிட்டாது.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment