குறை நிறை
தேவையும் விருப்பமும் உடையதே சீவ இனம் அனைத்தும். உன் தேவையை முடிக்க முயலும் போது பிறர் தேவையும் விருப்பமும் தாக்கப்படாமலிருக்க வேண்டும். மேலும் உனது உடலானது மிக நுட்பமாக, உனக்கு உயர்வாழ்வு அளிப்பதற்காகவே இயற்கையாய், நீண்டகாலமாகப் பல தலைமுறைகளாக வடிவமைக்கப்பட்டது. உனது எந்த எண்ணத்தாலும் செயலாலும், உனது உடலில் உள்ள எந்த உறுப்பும் நலியாமலிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. இதில் தவறும்போது மூளை செல்களின் அமைப்பும் உடல் உறுப்புக்கள், செல்கள் இவற்றின் அடுக்குகளும் சீர்குலைகின்றன. இதனால் தான் மனத்தில், உடலில் துன்பங்கள். இவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பே குண்டலினி யோகம்.
உனது உடலிலே, மூளையிலே ஏற்பட்ட சீர்குலைவு வாழ்வில் பல்வேறுபட்ட குறைகளாக மலருகின்றன. இக்குறைகள் கருமூலம் உங்கள் குழந்தைகளுக்கும் தொடருகின்றன. தவமும் அறமும் ஆற்றித்தான் இந்த உடல், அணு அடுக்குகளைச் சீர் செய்ய முடியும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment