வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 23 February 2012

பொறாமை

பொறாமை

பொருள், புகழ், அதிகாரம், புலனின்பம் என்ற நான்கு வகையில் தனக்கு மேலாகவோ, தனக்குச் சமமாகவோ பிறர் இருப்பதை அறியும்போது அதைப் பொறுக்க முடியாத ஒரு குறுகிய எல்லையுடைய மயக்கமான மனோநிலையே பொறாமையாகும்.

இதனால் தன்வாழ்வில் திருப்தியடையாது, ஆற்றல் குறைந்து, கடமை மறந்து நாளாவட்டத்தில் பயனற்றவராக மாறிவிட நேரும்.

ஆராய்ச்சியில் மிகுந்த பரந்த மனப்பான்மையுடையவன் மேலே சொன்ன நான்கு வகையில் மிகுதியாகப் பிறர் இருக்கப் பார்த்து மகிழ்வான். அவனிடமே தான் தவறு செய்யாத உயர்நிலையும், பிறர் தவறுகளை மன்னிக்கும் தகைமையும் இருக்கும். அவனே பொறுமை எனும் அறிவின் உயர்நிலையை அடைந்தவனாவான்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment