குழந்தைகளின் சுறுசுறுப்பு
உலகில் வாழும் உயிரினங்கள் எல்லாமே ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தான் தனக்கென குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்கின்றன. சாதாரண புழுவிற்கு இரண்டடி, தென்னை மரத்திற்கு 60 அடி, மனிதருக்கு அது 6 அடி சுமார். குழந்தைகளுக்கு 6 அடி உயருவதற்கான சக்தி, அழுத்தி வைக்கப் பட்டுள்ள ஸ்பிரிங் போல், சுருக்கி இருப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே பெரியவர்களின் செய்கைகள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த இயல்வதில்லை.
பெரியவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆற்றலை நல்முறையில் செயலாக்கும் வகையில் முறைப்படுத்துவது தான். அக்குழந்தைகளோடு இருக்கும் போது அவர்களை பணிவோடு நடக்குமாறு வளரச் செய்யுங்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment