வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 8 March 2012

தோற்ற மாற்றங்கள்

தோற்ற மாற்றங்கள்

இந்தப் பிரபஞ்சத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்காகத் தான் இத்தனை பரிணாமங்களும் வருகின்றன. அழுத்தம் (உருவம்), ஒலி, ஒளி, சுவை, மணம் இவற்றை ஐந்தறிவு விலங்குகளும் அறிகின்றன.

மனிதனுக்குள்ள ஆறாவதறிவோ, மறைபொருளான மனதை அறிவதற்குத்தான். மனிதன் ஆகாசத்தில் பறக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்காக இறக்கை வேண்டுமென்ற அவசியமில்லை. இந்த எண்ணத்தின் விளைவாக கருத்தொடரில் இன்னுமொரு சீவன் இறக்கையுடன் உருவாக வேண்டுமென்ற அவசியமுமில்லை. மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவைக் கொண்டு செயற்கையாக உருவாக்கிய கருவியின் மூலம் ஆகாசத்தில் பறக்கிறான். இதற்கு மேலாக என்னென்ன அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அதற்கு ஆறாவது அறிவைக் கருவியாக வைத்துக் கொண்டு பல உபகருவிகளை உற்பத்தி செய்யும் சக்தி மனிதனுக்கு வந்து விட்டது.

இதற்கு மேலும் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட இயல்பூக்கத்தில் இடமில்லை. ஆனால் அறிவின் வளர்ச்சி மட்டும் அதன் முழுமையை நோக்கி இறையுணர்வு பெறும் வரையில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment