வலச்சுழல் தொடக்க உடற்பயிற்சி
மனித உடலிலே உயிர்ச்சுழற்சி, சீவகாந்தச் சுழற்சி வலச்சுழலாகத்தான் இருக்கும். வலப்பக்கம் சுற்றுவதுதான் உடலுக்கு நல்லது. அது அழுத்தம் பெறும். அப்பொழுது தான் சீவகாந்தம் கூடுதலாகும் (charge). அதற்கு மாறாக இடப்பக்கம் சுற்றினால் சீவகாந்த ஆற்றல் குறைதல் (discharge) ஏற்படும்.
ஒருவரை உட்கார வைத்து அவரை வலப்பக்கமாகச் சுற்றிக் கொண்டே வந்தால் அவர்களுடைய நோய் நாளடைவில் நீங்கும். மாற்றி இடப்பக்கமாகச் சுற்றிக் கொண்டே வந்தால் இருவருக்குமே நோய் வந்து விடும்.
இவ்வாறான அமைப்பு இயற்கையிலே உடலில் அமைந்திருப்பதால் தான் அதைக் கடைப்பிடித்து நாம் எப்போதுமே வலப்பக்கமாக ஆரம்பித்து உடற்பயிற்சி செய்கிறோம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment