வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Thursday, 22 March 2012

சீவகாந்தம் வரவுசெலவு

சீவகாந்தம் வரவுசெலவு

கோபம், பொறாமை, பயம், வஞ்சம், பந்துக்கள் பாசம், பொருள் பற்று, கவலை, விருப்பு, வெறுப்பு, பேராசை, காமம் முதலிய எண்ண இயக்கங்கள் உடல் காந்த சக்தியைப் பெருமளவில் குறைத்து விடுகின்றன. மேலும் மிதமிஞ்சிய பேச்சு, உழைப்பு, போகம், ஆகாரம், வெட்பதட்பத் தாக்குதல்கள், இவைகளும் நோயாளிகள், தீயகுணமுடையோர், கற்பொழுக்கத் தவறுதல் மனித காந்த சக்தியை ஒவ்வொரு அளவில் குறைக்கக் கூடியதாயிருக்கின்றன.

சீவகாந்தத்தை அதிகரிக்க தவம் சிறந்த வழி. தவத்தால் அதிகரிக்கும் சீவகாந்த சக்தியைக் கொண்டு அறிவின் ஓர்மைப் பழக்கம், கற்பு, ஒழுக்கம், நல்லோர் நட்பு, தன்பால் அன்புடையோர் அளிக்கும் சுவையான மிதமான ஆகாரம், பேராதார நிலையை நோக்கி அறிவு நிற்கும் பழக்கம், மிதமான முறையான உடற்பயிற்சி, இவைகளால் சீவகாந்த சக்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவில் கூடிக் கொண்டே இருக்கும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment