வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 19 March 2012

வேதாத்திரிய சிந்தனைகள் : ஆலயம் : -



Facebook
Vallal Ramamurthy posted in VMSKY.
வேதாத்திரிய சிந்தனைகள் : ஆலயம் : - ஆலயமென்றால்...


வேதாத்திரிய சிந்தனைகள் : ஆலயம் : -

ஆலயமென்றால் அறிவு ஓர்மை நிலை பெற்று
ஆன்மாவெனும் உயிரில் அடக்கமுறும் பேறாம்
ஆலயம் எனும் சொல்லில் "ஆ" ஆன்மாவாகும்
அடுத்துவரும் "லயம்" அதனின் அடக்கநிலைக் குறிப்பு
ஆலயமாம் பயிற்சி முறை தேர்ந்தாற்றப் பழக
அறிவு உயிரை உணரும், மெய்ப்பொருளுமாகும்
ஆலயத்தால் மனிதன் அறவழி கண்டு வாழ்வான்
அதற்கறிவின் தரமொக்க இருவழிகள் உண்டு. - மகரிஷி

ஆ + லயம் = ஆலயம். 'ஆ' எனும் 'ஆன்மா' லயமாகும் இடமே
ஆலயம். ஆன்மா எனும் உயிரில் மனதை ஒடுக்கும்போது
அறிவு ஓர்மை நிலைபெற்று மனத்தைப் பற்றியும் உயிரைப்
பற்றியும் அறிந்துகொள்வதோடு தன் மூல நிலையாகிய
மெய்ப்பொருளையும் உணர்ந்துகொள்கிறது. தானே பரமாக
இருக்கும் நிலை அறிந்ததால் பிற உயிர்களுக்கு தீங்கு
இழைக்காமலும், துன்பப்படும் உயிர்களுக்கு துன்பத்தைப்
போக்கும் உயர்ந்த பண்பாகிய அறஉணர்வு மேலோங்கும்.
அற உணர்வு பெற்று மனிதன் வாழ இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று அகத்தவம். மற்றொன்று ஆலயம் செல்வது. ஆனால்
ஆலயத்தைக் காட்டிலும் ஆன்ம லயமே மனிதனை அறிவில்
உயர்த்தி இறைநிலையை உணர சிறந்த வழி. வாழ்க வளமுடன்


No comments:

Post a Comment