ஆசையின் மறுமலர்ச்சி
ஆசையின் மறுமலர்ச்சியே ஆறுகுணங்கள். ஆசை தடைப்படும் போது அத்தடையை நீக்க எழும் ஆர்வமே சினம். ஆசையுள்ள பொருட்களைத் தனக்கு வேண்டுமெனவும் பிறர் கவராமலும் பாதுகாத்துக் கொள்ளும் செயலே கடும்பற்று (லோபம்). ஆசை பிற பாலை நாடி எழுந்தால் அதுவே மோகம். ஆசையானது பொருள், செல்வாக்கு, புகழ் இவற்றின் மீது அழுந்தி அதைக் கொண்டு மக்களை உயர்வாக அல்லது தாழ்வாக கருதும் போது மதம். சினத்தை முடிக்க வலுவையும், வாய்ப்பையும் நாடி நிற்கும் ஆசை தான் வஞ்சம்.
ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க வகையில் பண்படுத்தி-ஒழுங்குபடுத்தி விட்டால், அதுவே ஞானமாக மலரும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment