மவுன நோன்பு
பொதுவாக மவுன நோன்பில் இரு வகை உண்டு.
(1) ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்று மனஉறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றலையும் சிதறாமல் காத்துத்தான் விரும்பும் செயலை வெற்றியோடு முடிக்க துணை செய்யும்.
(2) ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கிக் கொண்டு குடும்பம், பொருளாதாரம், வணிகம் இவைகளிலிருந்து அக்காலத்தில் விலகிக் கொண்டு மவுனமாக இருந்து அகத்தாய்வு செய்து கொள்ளல்.
இந்த இருவகை மவுன நோன்பு தான் நல்ல நோக்கத்தோடு பயன் விளைவிக்கத் தக்க வகையில் திட்டமிட்டு ஆற்றுவதாகும்.
குண்டலினி யோகத்தில் துரியாதீதத்தவம் ஆற்றும் போது புலன்கள், இச்சைகள், அறிவு அனைத்தையும் அடக்கி அறிவை இருப்பு நிலையான சிவமாக்கிக் கொண்டு பேச்சற்று இருக்கிறோம். இது மவுனநோன்பில் சேராது. இது அறிவின் இயக்கத்தை சீரமைக்க நாள் தோறும் சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு குறுகிய கால அளவில் செய்யும் உடற்பயிற்சி ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment