வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 16 May 2012

சித்து by - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

சித்து

எந்தவிதமாகச் செய்கிறான் என்று பிறர் அறிந்து கொள்ள முடியாத விதத்தில் தந்திரமாகவும் திறமையோடும் செய்யும், சமுதாயத்திற்கு எந்தவிதப்பயனும் விளைவிக்காத வியப்பூட்டும் செயல்களைச் சித்து என்று மயக்கநிலையில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.

ஒரு நெல்லை நூறு நெல்லாக்கும் சித்து செய்கின்ற விவசாயியையும், ஊதினால் பறந்து போகும் பஞ்சை பலவிதமான ஆடைகளாக்கித்தரும் சிறப்பான சித்து செய்யும் நெசவாளியையும், மண்ணைக் கொண்டு மாளிகை அமைத்து மனிதர்களைச் சுகமாக வாழச் செய்யும் கொத்தர்களையும், ஒரு துளி விந்துவை ஒன்பது மாதத்தில் ஒரு குழந்தையாக்கித் தரும் பெரும் வினோத சித்து செய்யும் தாய்மார்களையும் நாம் பாராட்ட முற்படுவதில்லை. ஆனால் சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் நஷ்டமே விளைவிக்கும் அறிவை மயக்கும் செயல்களைச் சித்து எனக் கொண்டு அதைச் செய்பவர்களை வியந்து பாராட்டும் வழக்கம் நம்மில் பலரிடம் பரவியிருக்கிறது.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment