 | வினா: சுவாமிஜி, சைவ உணவு மனிதனுக்கு ஏற்றது என்கிறீர்கள். ஆனால் அசைவ உணவு உண்ணும் மேல்நாட்டு மனிதர்கள் தானே நம்மை விட மிகச் சிறந்த விஞ்ஞான ஆராச்சி எல்லாம் செய்கிறார்கள் ?
வேதாத்திரி மகரிஷியின் விடை:
ஆராய்ச்சி செய்து என்ன பயன் ? சைவ உணவு உண்ணும் இவர்கள் மெதுவாக மனிதர்களைக் கொன்றால் அசைவ உணவு உண்ணும் அவர்கள் ஒரே நேரத்தில் கோடிக் கணக்கில் மனிதர்களை கொல்ல ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த விஞ்ஞான அறிவால் என்ன பயன் ? அது மனித வாழ்விற்கான விஞ்ஞானம் இல்லையே.
தானும் வாழவேண்டும் ; பிறரையும் வாழவிட வேண்டும் என்பது தான் மனிதனுக்கு ஏற்ற விஞ்ஞானமாகும். அது எங்கே வளர்ந்தது என்று பாருங்கள்.
அசைவ உணவு உண்ணும் மேலை நாடுகளின் சரித்திரத்தைப் பாருங்கள். அவ்வப் போது படை எடுத்து சிறிய நாடுகளை நசுக்கித் தன்னோடு சேர்த்துக் கொண்ட நாடுகள் தான் அவை. அவர்கள் பிறர் வாழப் பொறுக்க மாட்டார்கள். அதுவா மிகச் சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சி ? |
No comments:
Post a Comment