| Courtsy : ICRO Website
பஞ்சபூத நவகிரக தவம் :
என்னங்க! சனிப் பெயர்ச்சி முடிந்தும் கஷ்டம் தீரவில்லையா?
நோயில்லாத வாழ்க்கை, நிம்மதியான குடும்ப வாழ்க்கை, எதிர்நோக்கும் எல்லாவற்றிலும் வெற்றி வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதாங்க!., தன்னை அறிந்து, இயற்கையை அறிந்து, எல்லோருடனும் இணங்கி வாழும் விளைவறிந்த விழிப்பு நிலையான யோக வாழ்க்கை வாழ வேண்டும். எந்த மனிதனுக்கும் இந்த உடலுக்கான உணவு, உடை, உறைவிடம் என்ற தேவை நிவர்த்தியானாலும் அவனால் அதோடு சும்மா இருக்க முடியாது. அந்த மனத்தில் உள்ள பதிவுகள் பல எண்ணங்களாக உதித்து ஏதாவது, குறும்பு செய்து கொண்டேதான் இருக்கும். அதனால், நாம் மனத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
மனம் இயங்கும்போது அவர்களுடைய கருவமைப்புக்கு ஏற்றபடி நவகிரகங்களிலிருந்து வரும் ஆற்றல் அலை அவர்களுடைய பதிவுகளை தூண்டி செயல்பட வைக்கிறது. எல்லா மனிதருக்குள்ளும் இந்த சஞ்சித கர்மம் எனும் பரம்பரையாக தொடரும் வினைகள் உள்ளனவா? ஜோதிடம் குறிப்பிடும்படி கோள்கள் செயல்புரிகின்றனவா? என்ற ஐயத்துடன் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் சஞ்சித கர்மம் எனும் முன் ஜென்ம பதிவுகளுக்கேற்றபடிதான் கோள்கள் நிலை, கருவமைப்பு காத்திருந்து அமைகிறதா? சுவாமி எனக் அன்பர்கள் கேட்டனர்.
அதற்கு மகரிஷி அளித்த பதில் ஆமாம். ஒரு கோலியை உருட்டி விடுகிறீர்கள். கோலி விடும் வேகம் என்ன? பள்ளம் எந்த இடத்தில் எப்படி அமைந்திருக்கிறது? அதற்கேற்ப கோலி வந்து விழுகிறது. அதுபோல சஞ்சித கர்மத்திற்கேற்ப கோள்கள் நிலையும் கருவமைப்பும் அமைகிறது. என விளக்கினார்.
நவகிரகங்களிலிருந்து வரும் ஆற்றலைப் பற்றியும், அதனுடைய தூரம்,தன்மை, மனிதனிடத்தில் எந்த கோள் எந்த உறுப்போடு தொடர்பு கொள்கிறது என்பது பற்றியும், நம்முடைய உடல், மன ஆற்றல் பற்றியும் விழிப்புணர்வு வந்து விட்டால் நவகிரகங்களிலிருந்து வரும் அலையும், பஞ்ச பூதங்களும் நமக்கு நன்மை மட்டுமே தருகிற அளவுக்கு அதோடு ஒன்றி கலப்பு பெற முடியும். நவகிரகங்களும், பஞ்ச பூதங்களும் யோக நெறியை வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு நட்புடன் இருக்கும் என்பது மரணமிலாப் பெருவாழ்வு வாழும் சித்தர்களின் செய்தியாகும். அனைவரும் இந்த விழிப்புணர்வு பெற மகரிஷி பஞ்ச பூத நவக்கிரக தவம் எனும் பயிற்சியையும் மனவளக்கலையில் வைத்து வடிவமைத்திருக்கிறார். |
No comments:
Post a Comment