வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Friday, 13 September 2013

எதிர்சினம்

சாதாரணமாக ஒருவர் சட்டென்று சினம் வயப்படாதவர் என்றாலும் அடுத்தவருடைய சினம் இவரைத் தூண்டிவிட்டு விடக்கூடும். உதாரணமாக கணவர் சினம் மனைவியைத் தூண்டும். இரண்டு கொக்கிகள் மாட்டிக் கொண்டு ஒன்றையொன்று இழுத்துக் கொள்ளும் இந்தப் போராட்டத்திற்கு முடிவே இருக்காது. இதில் ஒரு கொக்கியாக மனைவியோ, கணவனோ அல்லது வேறு யாரோ இருக்கிறார்கள். ஒரு கொக்கியை, அதன் வளைவை நீக்கி விட்டு, கம்பியாக மாறப் போகும் கொக்கி யார்? இரண்டு பேரில் யார் அதிக அறிவாளியோ அவர் தான். 
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment