“சித்தரென்ற போதுதான் வேறென்றெண்ணி
ஜெகத்தலே நீ மயங்கித் திரிய வேண்டாம்
பக்தரென்ற மனமதுதான் சித்தராச்சு
பர வெளியிற் சக்தி சிவம் ஒன்றேயாச்சு
எத்திசையும் காடு மலை செடிகள் தோறும்
யிருப்பாரோ காயசித்தி ஆனபேர்கள்
சுத்தமில்லா மூடர்களே தேகமாயை
தொல்லை இல்லை உன்னுடைய சுழியிற் பாரே.”
இதன் கருத்தாவது:-சித்தர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மனத்தைக் கண்டபடி அலையவிடாதே.மனமே சித்தராகுதற்கு காரண கர்த்தாவாகுமென்றும்,ஆகாய வெளியில் சிவ சக்தி என்ற பாகுபாடின்றி ஒன்றாக இருப்பதையும் காண்க வென்றும்,காடு மலைகளில் காய சித்தி அடைந்த சித்தர்கள் உள்ளனரா என்று தேடி அலைய வேண்டாம்.சரீர மாயை விட்டு ஒழிக்கச் சுழிமுனையில் மனத்தை நிறுத்து என்றும் பொருளாகும்.
No comments:
Post a Comment