வெட்ட வெளி என்ற பெரும் பானைக்குள்ளே
வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி
அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்
ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்
கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்
கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்
தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது
சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சுமப் பொங்கல்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment