மதம் வேதம் சாத்திரம்
கருவமைப்பு, உணவு, எண்ணம், செய்கை இவற்றால் அறிவின் நிலை உயர்ந்து, ஆராய்ச்சியால் இயற்கை என்ற தெய்வநிலையையும், உடலியக்கத் தேவைகளையும், அறிவின் சிறப்பியல்புகளையும் அறிந்து மெய்யுணர்வின் நிலைக்கு ஐயுணர்வைக் கட்டுப்படுத்தி வாழ அறிந்து கொண்டவனே, அறிந்து கொண்ட விதம் வாழ்ந்து வருபவனே அறிஞன் அல்லது ஞானி எனப்படுகிறான்.
வாழத் தெரியாதவர்களுக்கும், வாழ்க்கை அனுபவமில்லாதவர்களுக்கும் அதை அறிந்தவன் வகுத்துக் காட்டும் வாழ்க்கை நெறிகள் மதம் என்றும், அந்நெறிகளைப் போதிக்கும் நூல் இயற்கை அமைப்பைக் கூறுமிடத்து வேதமாகவும், மனிதன் செயலை முறைப்படுத்துமிடத்து சாத்திரமாகவும் மதிக்கப் பெறுகின்றன.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment