எல்லோரும் நல்லவர்களே!
மனிதன் களங்கமற்றவன். தேவை, பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம் இவைகளால் சமுதாயத்தையும், அதன் நலனையும் மறந்து, தன்னளவிலும், தற்கால இன்பத்திலும் குறுகிய செயலாற்றுகிறான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
தேவைகளை காலாகாலத்தில் முடித்துக்
கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு, குழந்தை முதல் ஒழுக்கமாக வளர, அறிவு சமுதாய நல நோக்கத்திலும், இயற்கை தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சி பெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment