வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Monday, 28 May 2012

நால்வகைப் பேறுகள்

நால்வகைப் பேறுகள்

மனிதன் பிறந்தது முதல் முடிவு வரையில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்வதற்கு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நால்வகைப் பேறுகளும் அடைய வேண்டும். உயிர் வாழ்வதற்குப் பொருட்கள் வேண்டும். புலன் இன்பம் கெடாமல் காக்க, பொருட்களோடும், மக்களோடும் கொள்ள உறவில், அளவு முறை கண்டு விழிப்புடன் செயலாற்ற வேண்டும். பொருட்களைப் பெறுவதில் அறநெறி பிறழாமல் பெற வேண்டும். இவ்வாறு அறநெறி வழுவாத முறையில் பொருளும் இன்பமும் பெற்று வாழ்ந்தால் அறிவு நாளுக்கு நாள் சிறப்புற்று மேலோங்கி இறையுணர்வு பெற்று நிறைவான வாழ்வை எய்த முடியும்.

சுருக்கமாகச் சொல்வதன்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பேறுகளும் மனிதன் வாழ்வின் நிறைவுக்காகப் பெற வேண்டும். ஆயினும், இந்நான்கில் ஒன்றால் மற்றொன்று கெடாமலும் பார்த்துப் பெற்றுத் துய்க்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment