வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Tuesday, 29 May 2012

வீடுபேறு என்பது என்ன?

வீடுபேறு என்பது என்ன?

வீடு எனில் இடம் என்று பொருள். நாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? உலக மீது. உலகம் உயிர்கட்கு இடமாக இருக்கிறது. உலகம் எங்கு எந்த இடத்தில் இருக்கிறது? அது சூரியக் குடும்பத்தில் உருண்டு மிதந்து உலவிக் கொண்டிருக்கிறது. சூரிய குடும்பம் எங்கே இருக்கிறது? எந்த இடத்தில் இருக்கிறது. சுத்த வெளியான இருப்பு நிலையே சூரிய குடும்பத்துக்கு இடம். சுத்த வெளிக்கு ஏதேனும் இடமிருக்கிறதா? இல்லை. வீடில்லா வீடு சுத்த வெளி. இவ்வெளியே எல்லாப் பொருட்களிலும் விரைவாகவும் இயக்க ஒழுங்கான அறிவாகவும் இருக்கிறது.

மனிதனின் அறிவு உயர்ந்து தன்னையறிந்து கொள்ளும் நிலையில் அறிவே மெய்ப் பொருளாக, இருப்பு நிலையாகக் காட்சியாகும். வீடில்லா வீடான வெட்டவெளியே அறிவாக, அறிவே தானாக உணரும் பேறு தான் வீடு பேறாகும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment