வேதாத்திரி மகரிஷி எளிய முறைக் குண்டலினி யோகா, சிங்கப்பூர்


Tel : 98210187 / 91133947/ 96624248 / 91462157 / 81804175 / 91565164


Email : arulmalarsingapore@gmail.com






Wednesday, 30 May 2012

Mandram

மனவளக்கலை மன்றத்தின் அவசியம்

நாள் தோறும் உடம்பு குளிக்கிறோம். ஒரு நாள் குளிக்காவிட்டால் அழுக்கும் வியர்வை மணமும் உண்டாகின்றன. நாள்தோறும் குளித்துக் கொண்டே இருந்தால் தான் உடல் சுத்தமாக இருக்கின்றது. இதே போல் தான் புலன்களைக் கொண்டு வாழ்வை நடத்தும் மனிதனுக்கு புலன் மயக்கத்தால், தன்னாலோ பிறராலோ உயிரில் அழுக்குப் படுகின்றது. அந்த அழுக்கு உடல்நோய், உள்ளக்களங்கம் இவையாக மாறுகின்றன.
தவமும் தத்துவ விளக்கமும் கொண்டு, அவ்வப்போதும், நாள்தோறும், வாரத்திற்கு ஒரு முறையும், உயிர்த் தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும். கூட்டுத்தவம், அருள் உரை ஆற்றல் அல்லது கேட்டல் என்பவை மூலம் மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடி உயிர்த்தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -

No comments:

Post a Comment