இன்பமும் துன்பமும்
உடலியக்கத்தால், உடலில் வெளியேற்ற வேகங்களாகவும், தேவை வேகங்களாகவும் இருக்கும் மூத்திரம், வியர்வை, மலம், சுக்கிலம், அபான வாயு, தும்மல், இருமல், ஏப்பம், வாந்தி, கொட்டாவி, கண்ணீர், பசி, தாகம், தூக்கம் இவைகளைத் தேவையான போது அளவுடன் முறையுடன் வெளியேற்ற அல்லது உட்கொள்ள வசதி கிட்டி செய்து முடிப்பதும், இயற்கையான-உண்மையான நிகழ்ச்சி நிலை இன்பம். இவற்றிற்கு முரண்பட்ட அனுபோக உணர்ச்சி நிலைகள் உண்மையான துன்பம் ஆகும்.
எப்போதோ அனுபவித்ததை நினைத்தும், அனுபவிக்கப் போவதாக நினைத்தும் அடையும் இன்பமும், துன்பமும், தான்-தனது என்னும் ஞாபகப் பற்றுதலால் கொள்ளும் - குறுகிய பாச பந்த எண்ணங்களால் கொள்ளும் - இன்பமும் துன்பமும் கற்பனை இன்ப துன்பம் எனப்படும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment