சடங்குகள்
சடங்குகளை நிதானமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சடங்கும் அடியோடு ஒன்றுமில்லை என்று எடுத்து விடாமல் அதற்குரிய காரணங்களை எல்லாம் கண்டுபிடித்தோம் என்றால் பல சடங்களுக்கு இன்னும் மனித சமுதாயத்திலே தேவைஇருக்கிறது என்பது புலப்படும். இன்னும் பலவற்றை உதறிவிட்டு முன்னேற வேண்டியதாக உள்ளது. சடங்குகள் பற்றி ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தி முடிவுக்கு வர வேண்டும். முடிவெடுத்த பின் அந்த முடிவை நடைமுறைப்படுத்த வேண்டும். நடைமுறைப்படுத்தினால் தான், அதன் பிறகு சமுதாயத்திலே மாற்றம் வரும். இந்தச் சீர்த்திருத்தப்பணி காலத்தால் தேவையாகிவிட்டது. முக்கியமாக இளவயதினோர் இதிலே அக்கறை காட்ட வேண்டும். இத்துறையில் ஆர்வம் கண்டோர், சமுதாய நலநாட்டம் கண்டோர் விரோத மனப்பான்மை எழாத விதத்திலே சமுதாயத்தோடு ஒத்தும் கலந்தும் செயலாற்ற வேண்டும்.
- அருத்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment