வானியல் : சோதிடம்
கோள்களின் உலாவல் விரைவு, நில உலகுக்கும் ஒவ்வொரு கோளுக்கும் இடையே அமையும் தொலைவு, ஒரு கோளின் ஆற்றலோடு மற்ற கோளின் ஆற்றல் கலப்புற்று பரவும் தன்மை, வானில் இயங்கும் நட்சத்திரக் கூட்டங்களின் காந்த ஆற்றலோடு கோள்களின் ஆற்றல் கலப்பதால் ஏற்படும் சூழ்நிலை மாற்றம் இவற்றின் கணித இயல்தான் வானியல் (Astronomy).
இத்தகைய கோள்களால் அமையும் வானிலை வேறுபாட்டுச் சூழ்நிலைகளால் நில உலகுக்கு வெப்ப, தட்ப ஏற்றத்தாழ்வுகள், காந்த அலை இயக்க வேறுபாடுகள் அவ்வப்போது உண்டாகும். இவற்றால் மனிதன் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் விளைவுகளின் கணிப்பே சோதிடம் (Astrology) ஆகும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment