நான் என்ற அகந்தை ஏற்படுவது எதனால்?
பேரியக்க மண்டல மலர்ச்சிகட்கு ஆதியானதே தெய்வம். அதன் மலர்ச்சி நிலைகளில் சிறந்த கட்டம் மனிதன். அவன் தெரிந்தோ தெரியாமலோ அவனுள் அடங்கியுள்ள முழுமைப் பொருள், தான் உயர்ந்தவன் என்று ஒலிக்கிறது. இதனால் எந்த தவறும் இல்லை. ஆயினும் எல்லா உயிர்களும் என் போன்று பிறப்பிலும், அதற்குரிய செயல்களிலும் சிறப்பு பெற்று தானே விளங்குகின்றன என்ற உண்மையை மறந்து, தான் மாத்திரம் உயர்ந்தவன் என்று என்னும் மயக்கம் தான் அவன் அறிவின் சிறுமையை விளக்குகின்றது. பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே கால எல்லையைக் கொண்டு இயங்கும் உடலைப் பற்றியும் அதன் படர்க்கை நிலையாகிய அறிவைப் பற்றியும் அறியும் வரை இந்த மயக்கம் ஒவ்வொருவருக்கும் இயல்பு தான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி -
No comments:
Post a Comment